பெங்களூரு
இன்று கர்நாடகா உயர்நீதிமன்றம் சித்தராமையா மூடா விவகாரம் குறித்து அளித்த மனு மீது இறுதி விசாரணை நடத்த உள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு பாஜக ஆட்சியில் மைசூருவில் மைசூரு நகா்ப்புற மேம்பாட்டு ஆணைய (மூடா) லே-அவுட்டில் முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு 14 வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டன. அந்த ஆணையம் அவருடைய 3.16 ஏக்கர் நிலத்தை அனுமதி இன்றி எடுத்துக் கொண்டதால், பார்வதிக்கு இந்த வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டன.
இந்த விவகாரத்தில்ல் முறைகேடு நடந்துள்ளதாக கூறி முதல்வர் சித்தராமையா மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி வழங்கினார். இதுபற்றி தாக்கல் செய்த மனுக்கள் மீது பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. தன் மீது வழக்கு தொடர கவா்னா் வழங்கிய அனுமதி உத்தரவை ரத்து செய்யுமாறு கோரி கர்நாடக ஐகோர்ட்டில் சித்தராமையா மனு தாக்கல் செய்தார்.
இன்று இந்த மனு நீதிபதி நாகபிரசன்னா முன் விசாரணைக்கு வருகிறது. ஏற்கனவே இந்த வழக்கில் சித்தராமையா மற்றும் ஆளுநர் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டுள்ளனர். இன்று சித்தராமையா வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி, மீண்டும் சில வாதங்களை எடுத்து வைக்கிறார். தொடர்ந்து இந்த வழக்கின் மீதான தீர்ப்பை நீதிபதி ஒத்திவைத்து அடுத்த ஓரிரு நாளில் தீர்ப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.