சென்னை

ன்று முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெறுகிறது.

இன்று காலை 10.30 மணிக்குத் தமிழக முதல்வரும் தி.மு.க. தலைவரும் ஆன மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது..

இந்தக் கூட்டத்தில் திமுகவைச் சேர்ந்த மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. கூட்டத்தில் எழுப்பப்பட வேண்டிய முக்கிய பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளன.

தவிர ஆளுநர் ஆா்.என்.ரவியின் செயல்பாடுகள், பொது சிவில் சட்டம் உட்பட முக்கிய விஷயங்களை எழுப்புவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளன.