விஜயவாடா
இன்று சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுடன் 175 இடங்களை கொண்ட ஆந்திர மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது. கடந்த 4-ந் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களை கைப்பற்றி தனிப் பெரும்பான்மையுடன் அபார வெற்றி பெற்றதால் ஜெகன் மோகன் ரெட்டி முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.
நேற்று தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.எம்.ஏ.க்கள் கூட்டம் விஜயவாடாவில் நடைபெற்றது. கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டசபை கட்சி தலைவராக முதல்வராக சந்திரபாபு நாயுடுவை பவன் கல்யாண் முன்மொழிந்து. பாஜக மாநில தலைவர் டகுபதி புரந்தேஸ்வரி இதை ஆதரித்தை தொடர்ந்து, அனைத்து எம்.எல்.ஏ.க்களும் இதை ஏற்றுக்கொண்டதால் சட்டசபை கட்சி தலைவராக சந்திரபாபு நாயுடு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
சட்டசபை கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து சந்திரபாபு நாயுடு விஜயவாடாவில் ஆளுநர் அப்துல் நசீரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக ஆந்திர முதல்-மந்திரியாக இன்று பதவியேற்கிறார். பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு மாநிலங்களின் முதல்-மந்திரிகள், மத்திய மந்திரிகள் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்கள் பலரும் பங்கேற்க உள்ளனர்.