மும்பை

ன்று மகாராஷ்டிராவில் 6,960 மற்றும் கேரளா மாநிலத்தில் 14,539 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 6,960 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 61,72,362 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 226 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 1,25,798 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 10,402 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 59,38,158 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,05,121 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 14,539 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 30,87,673 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 124 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 14,840 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 10,331 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 29,57,201 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,15,184 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.