திருவனந்தபுரம்

ன்று உத்தரப்பிரதேசத்தில் 35,311. மற்றும் கேரளா மாநிலத்தில் 28,469 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளா மாநிலத்தில் இன்று 28,469 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 14,05,656 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 30 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 5,111 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 8,112 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 11,81,324 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 2,18,889 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 35,311 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 10,86,625 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 206 பேர் உயிர் இழந்து இதுவரை 11,557 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 25,635 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 7,77,844 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

தற்போது 2,97,616 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் உத்தரப்பிரதேச மாநிலம் நான்காம் இடத்தில் உள்ளது.