மும்பை

காராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2,673, கர்நாடகாவில் 487 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 2,673 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 20,44,071 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 30 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 51,310 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 1,672 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 19,55,548 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 35,952 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்தில் உள்ளது.

 

கர்நடாகாவில் இன்று 487 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 9,42,518 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 3 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 12,236 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 493 பேர் குணம் அடைந்துள்ளனர்.இதுவரை 9,24,304 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.தற்போது 5,959 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா மூன்றாம் இடத்தில் உள்ளது.