ஸ்காட்லாந்து

லகப் புகழ்பெற்ற ஜானி வாக்கர் விஸ்கி அடுத்த வருடம் முதல் காகித பாட்டிலில் வெளிவர  உள்ளது.

 

உலக அளவில் புகழ் பெற்ற மற்றும் பழமையான ஜானி வாக்கர் நிறுவனம் மது தயாரிப்பில் முதல் இடத்தில் உள்ளது.  ஜானி வாக்கர் ஸ்காட்ச் விஸ்கி கோடிக்கணக்கான மதுப்பிரியர்கள் விரும்பி அருந்துவதாகும்.   தற்போது ஜானி வாக்கர் மது உற்பத்தியை ஸ்காட்லாந்து நிறுவனமான டியாஜியோ கவனித்து வருகிறது.   இந்த நிறுவனம் விஸ்கி பாட்டில்களில் பல மாறுதல்கள் செய்து வருகிறது.

இந்த மது பாட்டில்களில் ஆண் படம் அச்சிடப்பட்டு இருந்தது.  பெண் மதுப்பிரியர்களும் அதிகரித்து வருவதால் கடந்த 2018 பிப்ரவரி மாதம் முத பெண் புகைப்படம் அச்சிடப்பட்டது.    இந்த நிறுவனம் 1865 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது   முதலில் கண்ணாடி பாட்டில்களில் அடைக்கப்பட்டு விற்கப்பட்ட ஜானி வாக்கர் விஸ்கி அதன் பிறகு பிளாஸ்டிக் பாட்டிலில் விற்கப்பட்டது.

இதைப் போல் பிளாஸ்டிக் பயன்பாடு மிகவும் அதிகமாக உள்ளது.  இப்போது பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.  ஆனால் இந்த எதிர்ப்பில் முன்னோடியாக உள்ள ஐரோப்பிய நாடுகளில் மட்டும் கடந்த 2018 ஆம் ஆண்டு குளிர்பானங்கள் உள்ளிட்ட அனைத்து பாக்கிங்குகளுக்கும் 82 லட்சம் டன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எனவே ஜானி வாக்கர் நிறுவனம் பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுவதுமாக நிறுத்த முடிவு எடுத்துள்ளது  அதன்படி வ்ரும் 2021 ஆம் ஆண்டு 100% பிளாஸ்டிக் இல்லாத காகித பாட்டில்களில் ஜானி வாக்கர் விஸ்கி அறிமுகம் செய்யப்பட உள்ளது.   இந்த காகித பாட்டில்கள் பல்பெக்ஸ் லிமிடட் என்னும் நிறுவனம் தயாரிப்பாகும்.   இவ்வாறு மது பானங்கள் அடைக்கப் பயன்படும் சிறப்புக் காகித பாட்டில்களைத் தயாரிக்கும் முதல் நிறுவனம் பல்பெக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.