டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இன்று வெளியானது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை கடந்த ஜூன் 9-ம் தேதி நடத்தியது.

இந்த தேர்வு முடிவுகள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு முடிவுகள் தற்போது வெளியானது.

www.tnpscresults.tn.gov.in, www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.