சென்னை
தமிழக அரசு ரேஷன் அட்டை தாரர்கள் அவர்கள் வசதிப்படி ரேகை பதிவு செய்யலாம் என உத்தரவிட்டுள்ளது.

தமிழக உணவுப்பொருள் வழங்கல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
”ரேஷன் கடைகளில், அத்தியாவசிய பொருட்கள் பெறும் பயனாளிகளின் குடும்ப உறுப்பினரது விரல் ரேகை வைக்கப்படும் போது, ஆவணங்கள் எதுவும் கேட்கக்கூடாது.
ரேஷன் அட்டைதாரர்களின் வசதியின்படி ரேஷன் கடைக்கு வந்து, விரல் ரேகை பதிவு செய்து கொள்ளலாம். அவர்களை கட்டாயப்படுத்தி கடைக்கு அழைத்து சிரமம் ஏற்படுத்தக் கூடாது.
விரல் ரேகை சரிபார்ப்பு மேற்கொள்ளவில்லை எனில், பொருட்கள் வழங்கப்படாது என்ற தவறான தகவலை கூறக்கூடாது என்று, ஊழியர்களை அறிவுறுத்த வேண்டும்.”
என்று கூறப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel