சென்னை
தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 5 முதல் மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
வரும் திங்கள்கிழமை அதாவது ஜூலை 5 காலை 6 மணியுடன் தற்போதைய கொரோனா ஊரடங்கு முடிவடைகிறது. இந்நிலையில் இந்த ஊரடங்கை ஜூலை 5 முதல் மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன
அனைத்து மாவட்டங்களிலும் துணிக்கடைகள், நகைக்கடைகள் உரியக் காற்றோட்ட வசதியுடன் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி
வணிக வளாகங்கள், காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி
அனைத்து மாவட்டங்களிலும் பொதுப் போக்குவரத்து 50% பயணிகளுடன் இயங்க அனுமதி
உடற் பயிற்சி கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்கள், காற்றோட்ட வசதியுடன் செயல்பட அனுமதி
உணவகங்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 50% இருக்கைகளில் உணவருந்த அனுமதி
டீக்கடைகளில் 50% பேர் அமர்ந்து டீ பருக அனுமதி
அனைத்து மாவட்டங்களிலும் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகள் தவிர இதர பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி
பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்பட அனுமதி இல்லை.
மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே பொது போக்குவரத்துக்கு அனுமதி.
மாநிலங்களுக்கு இடையே பொது போக்குவரத்து அனுமதி இல்லை.
இந்த ஊரடங்கில் நீச்சல் குளம், திரையரங்குகள் மற்றும் மதுபான கூடங்களுக்கு (பார்) அனுமதி வழங்கப்படவில்லை.