சென்னை

ன்று தமிழகத்தின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் பொறுப்பேற்றுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிக்ஷ்ச்ம்சி சத்யபிரதா சாஹவுக்குப் பதிலாக ஐஏஎஸ் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக இந்தியத் தேர்தல் ஆணையம் நியமித்தது. இதனால், தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரி பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள முதல் பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். தமிழக தேர்தல் அதிகாரியாக இதுவரை ஆண் ஐ.ஏ.ஸ் அதிகாரிகளே இருந்துள்ளனர்.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவரான அர்ச்சனா பட்நாயக், தமிழகத்தின் முதல் பெண் தலைமைத் தேர்தல் அதிகாரி என்ற பெயரை தற்போது பெற்றுள்ளா மாதிரி கோவை மாவட்டத்தின் முதல் பெண் மாவட்ட ஆட்சியர் என்ற பெருமையையும் இவர் ஏற்கனவே பெற்றுள்ளார்.

இதற்கு முன் தமிழக சிறு, குறு தொழிலாளர் துறையின் செயலாளராக பணியாற்றி வந்த அர்ச்சனா பட்நாயக் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக இன்று பொறுப்பேற்றுள்ளார்.