டில்லி

ன்று தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்துள்ளார்.

தமிழகத்துக்கு வர வேண்டிய நிதிகளான உள்ளாட்சிகளுக்கான நிதி, நிவாரண நிதிகள், மத்திய அரசு வசூலிக்கும் வரிகளில் தமிழகத்தின் பங்கு உள்ளிட்ட பல்வேறு கணக்குகளில் நிலுவையில் உள்ளன. இன்று தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்துள்ளார்.

அப்போது அவர் வரும் மார்ச் மாதம் 31 ஆம் தேதிக்குள் இந்த நிதிகள் விடுவிக்கப்பட்டால் அந்த தொகைகளை அடுத்த மாதம் தமிழக அரசு தாக்கல் செய்ய உள்ள நிதிநிலை அறிக்கையில் சேர்க்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.  மேலும் இந்த நிதியாண்டில் நிலுவையில் உள்ள நிதிகள் விடுவிக்கப்படவில்லையானால், அந்த தொகைகளை அடுத்த நிதிநிலை அறிக்கையில் தான் கணக்கில் சேர்க்க முடியும் என பழனிவேல் தியாகராஜன் விளக்கி உள்ளார்

அவர் நிதித்துறை செயலாளர் சோமநாதன் உள்ளிட்ட நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளைச் சந்தித்து தமிழகத்துக்கான திட்டங்களுக்கு விரைவில் நிதி ஒதுக்கீடுகள் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள விதிகளை மத்திய அரசு விரைவில் விடுவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.   அவரது இந்த சந்திப்பின்போது தமிழக நிதி அமைச்சகத்தின் கூடுதல் தலைமைச் செயலர் முருகானந்தம் உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனைகளில் பங்கேற்றனர்.