சென்னை
மிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 3057 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,03,250 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 10,858 பேர் உயிர் இழந்து 6,59,432 பேர் குணம் அடைந்து தற்போது 32,960 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் மட்டும் இன்று 844 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.
இதுவரை சென்னையில் 1,94,139 பேர் பாதிக்கப்பட்டு 3,580 பேர் உயிர் இழந்து 1,79,931 பேர் குணம் அடைந்து தற்போது 10628 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அடுத்ததாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 42,245 பேர் பாதிக்கப்பட்டு 649 பேர் உயிர் இழந்து 40,182 பேர் குணம் அடைந்து தற்போது 1,414 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மூன்றாவதாக கோவை மாவட்டத்தில் 41,262 பேர் பாதிக்கப்பட்டு 530 பேர் உயிர் இழந்து 36,974 பேர் குணம் அடைந்து தற்போது 3,758 பேர் சிகிச்சையில் உள்ளனர்.