கொல்கத்தா: திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து மேலும் ஒரு எம்எல்ஏ ராஜினாமா செய்துள்ளார்.

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 27ம் தேதி முதல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அரசியல் கட்சிகள் அறிவித்து வருகின்றன.

இந் நிலையில், திரிணமூல் காங்கிரசின் வேட்பாளர்கள் பட்டியலை மமதா பானர்ஜி அறிவித்தார். மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாததால் எம்எல்ஏ தேபஸ்ரீ ராய் என்பவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த வாரம் சில திரிணமூல் சட்டசபை உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]