குந்தி,

ஜார்க்கண்டில் நக்சலைட்டுகளால் கடந்த மாதம் கடத்திச்செல்லப்பட்ட 3 சிறுமிகளையும்  அந்த அமைப்பினர் இன்று அதிகாலையில் விடுதலை செய்தனர்.

ஜார்க்ண்டில்  இந்திய மக்கள் விடுதலை முன்னணி (பிஎல்எப்ஐ.) என்ற பெயரில் நக்சலைட்டு  அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பினர்  அரசுக்கு எதிராக தங்களது போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த மாதம் ஏப்ரல் 14ந்தேதி அன்று பிறந்தநாள் விழா கொண்டாட சென்ற 3 சிறுமிகள் ஜார்கண் டில் உள்ள  குந்தி டோலி பகுதியில் நக்சலைட்டுகளால் கடத்தி செல்லப்பட்டனர்.

இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அந்த சிறுமிகளின் பெற்றோர் காவல்நிலையத்திலும் புகார் கொடுத்தனர்.

காவல்துறையினர் மேற்கொண்டு அதிரடி நடவடிக்கை காரணமாக, 3 சிறுமிகளையும் அதிகாலை 3 மணி அளவில்  நக்சலைட்டுகள் விடுவித்துவிட்டு தலைமறைவானதாக கூறப்படுகிறது.