அபுதாபி:
சவுதி அரேபியாவில் இருக்கும் கடுமையான சட்டங்களால் வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 815 பெண்கள், தஞ்சம் கேட்டு மனு கொடுத்துள்ளனர்.
சவுதி அரேபியாவில் பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. சமூக ஊடகங்களின் வருகை அந்த பெண்களிடம் மனமாற்றத்தையும், தைரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சவுதி அரேபியாவைச் சேர்ந்த 18 வயது ரஹாப் முகமது. தன் குடும்பத்தாரின் வன்முறையை எதிர்த்து சவுதியைவிட்டு சுதந்திரக் காற்றை சுவாசிக்க வெளியேறினார்.
ஆஸ்திரேலியாவுக்கு சென்ற அவர் வழியில் பாங்காக்கில் தடுத்து நிறுத்தப்பட்டார். ரஹாத் முகம்மதுவை தாய்நாடான சவுதி அரேபியாவுக்கே திருப்பி அனுப்புமாறு தாய்லாந்து அரசை சவுதி அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.
மாகாண கவர்னராக இருக்கும் தன் தந்தை கொன்றுவிடுவார், என்னை அனுப்பாதீர்கள் என்று கெஞ்சினார்.
சில நாட்கள் விமான நிலைய ஓட்டலில் அவர் தங்க வைக்கப்பட்டார். பின்னர், அவருக்கு கடந்த ஜனவரி 12-ம் தேதி கனடா அரசு தஞ்சம் கொடுத்தது.
இந்த பிரச்சினை உலகம் முழுவதும் பிரதிபலித்தது.
ரஹாத் முகமதுவைத் தொடர்ந்து ஏராளமான பெண்கள் சவுதி அரேபியாவிலிருந்து வெளியேறி பல்வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
கடந்த 2017-ம் ஆண்டு வெளிநாடுகளில் தஞ்சம் கேட்டு 815 பெண்கள் விண்ணப்பித்திருப்பதாக ஐ.நா சபையின் அகதிகள் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.