பிரிட்டன் இரண்டாம் எலிசபெத் ராணியிடம் சோசியல் மீடியா மானேஜராக பணியாற்ற ஆட்கள் தேவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சம்பளமாக ரூ.26.5 லட்சம் என தெரிவிக்கப்பட் டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

இதுகுறித்து பிரிட்டன் அரசு சார்பில் விளம்பரம் வெளியிடப்பட்டு உள்ளது. அதில், இங்கிலாந்தின் பக்கிங்ஹாம் அரண்மனையில் மகாராணி இரண்டாம் எலிசபெத்துக்கு சோஷியல் மீடியா மேனேஜராகப் பணியாற்றுவதற்கான இடம் காலியாக இருப்பதாகவும், இதற்கு தகுதியான நபர் தேவை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சோசியல் மீடியா மானேஜர் பதவிக்கு தகுதியாக, டிவிட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளப் பக்கங்களை கையாள்வதில் திறமையானவர்களாகவும், தொழில்நுட்பத்தில் தேர்ச்சியான துடிப்பாக செயலாற்றுபவர்களாகவும் இருக்க வேண்டும் என்றும், இதற்காக சம்பளம் இந்திய ரூபாயின் மதிப்பில் ஆண்டுக்கு ரூ. 26.5 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அத்துடன் பணியில் சேர்பவர்களுக்கு தினமும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். ஆண்டுக்கு சம்பளத்துடன் 33 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். பணியிடம் பக்கிங்ஹாம் அரண்மனை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்… முயற்சி செய்யுங்கள் இளைஞர்களே…
[youtube-feed feed=1]