சென்னை: தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கான “பிவிசி‘” தடுப்பூசி போடும்பணியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் உள்ள 9.23 லட்சம் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு “நியுமோ கோகள் காஞ்ஜுகேட் தடுப்பூசி” எனப்படும் பிவிசி தடுப்பூசி போடும் பணி தொடங்கி வைக்கப்பபட்டுள்ளது.
தேசிய தடுப்பு நோய் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் மருத்துவ மற்றும் குடும்ப நல அமைச்சரால் நிமோகோகல் தடுப்பூசி (பி.சி.வி) நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.
தடுப்பூசி 6 வாரங்கள் மற்றும் 14 வாரங்களிலும், கூடுதலா 9வது மாத வயதில் பூஸ்டர் டோஸுடன் வழங்கப்படுகிறது.
நிமோகோகல் கான்ஜுகேட் தடுப்பூசியானது (பி.சி.வி 13) நிமோகோகல் தொற்று நோயை தடுக்கும் ஆற்றல் கொண்டது.
நிமோகோகல் நோய் என்பது நிமோகோகல் பாக்டீரியாவால் ஏற்படும் எந்தவொரு நோயையும் குறிக்கிறது. இந்த பாக்டீரியாக்கள் நுரையீரலின் தொற்றுநோயான நிமோனியா உள்ளிட்ட பல வகையான நோய்களை ஏற்படுத்தும். நிமோனோகல் பாக்டீரியாக்கள் நிமோனியாவின் பொதுவான காரணங்களில் ஒன்றாகும். அதன்படி, யாருக்கு வேண்டுமானாலும் நிமோகோகல் நோய் வரலாம், ஆனால் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சில நோய்களின் தாக்குதலுக்கு ஆளானவர்கள், 65 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் மற்றும் சிகரெட் புகைப்பவர்களுக்கு இந்த நோய் விரைவில் தாக்கும் அபாயம் உள்ளது. இந்த நோயின் தாக்கத்தால் சிலருக்கு மூளை பாதிப்பு அல்லது காது கேளாமை போன்ற நீண்டகால பிரச்சினைகள் ஏற்படலாம். நிமோகோகல் நோயால் ஏற்படும் மூளைக்காய்ச்சல், பாக்டீரியா, நிமோனியா ஆகியவை ஆபத்தானவை.
அதன் காரணமாகவே, குழந்தைகளுக்கு “நியுமோ கோகள் காஞ்ஜுகேட் தடுப்பூசி” போடப்படுகிறது. இந்த தடுப்பூசி எடுத்துக்கொள்வதின் மூலம், காது நோய்த்தொற்றுகள், சைனஸ் நோய்த்தொற்றுகள், மூளைக்காய்ச்சல் (மூளை மற்றும் முதுகெலும்பை உள்ளடக்கிய திசுக்களின் தொற்று), பாக்டீரியா (இரத்த ஓட்டம் தொற்று) தொற்றில் இருந்து குழந்தைகளை பாதுகாத்துக்கொள்ளலாம்.