லண்டன்:
டேனியல் கிரேக்கை அடுத்த ஜேம்ஸ்பாண்ட் யார் என்ற கேள்விக்கு பதிலளித்த படத்தின் தயாரிப்பாளர் பார்பரா பார்க்கோலி, அடுத்த ஜேம்ஸ்பாண்ட் பெண் என்ற செய்தியை மறுத்துள்ளார்.

அவர் ஆண்தான் என்றும் கருப்பினத்தவராகக் கூட இருக்கலாம் என்றும் பார்பரா தெரிவித்துள்ளார்.  மேலும் ஜேம்ஸ்பாண்ட் பட கதா நாயகிகளுக்கு தனி ரசிகர் கூட்டம் உண்டு.

இந்நிலையில் புதிதாக வரவிருக்கும் ஜேம்ஸ்பாண்ட் படவரிசையில் 25வது படமான “No Time to Die”.யில் நடித்துள்ள லாசானா லின்ச் தனக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்ட போது பலரது கோபத்துக்கும் ஏச்சுக்கும் அவதூறுகளுக்கும் ஆளானதாக பத்திரிகை பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.