உலகளவில் பெரும் மதிப்புடைய மற்றும் நம்பிக்குரிய தலைவர்கள் பட்டியலில் இந்திய பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார். உலக மக்களை குழப்பி வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 8-ஆவது இடத்தில் இருக்கிறார்.
இந்திய பிரதமராக 4,078 நாள்களை கடந்து, நீண்ட நாள் பதவி வகித்த இந்திய பிரதமர்களில் முதன்மையானவராக இருந்து வந்த இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்து மோடி, பிரதமராக தொடர்கிறார்.
உலகத் தலைவர்களின் ‘ஜனநாயகத் தலைவர் ஒப்புதல் மதிப்பீடுகள்’ பட்டியலில் 75 சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளதால், பிரதமர் நரேந்திர மோடி மக்களின் இதயங்களைத் தொடர்ந்து ஆட்சி செய்து, அவர்களின் நம்பிக்கையை அனுபவித்து வருகிறார் என்று அமெரிக்க வணிக நுண்ணறிவு நிறுவனமான மார்னிங் கன்சல்ட் ஜூலை 25ந்தேதி (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.

உலகின் அதி நம்பிக்கையான தலைவர்கள் குறித்த பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார். உலகளவில் அதி நம்பிக்கையான மற்றும் பெரும் மதிப்புடைய தலைவர்களின் பட்டியல் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் 75 சதவிகித ஆதரவுடன் பிரதமர் மோடி முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
ஒரு பில்லியனுக்கும் அதிகமான இந்தியர்களால் நேசிக்கப்பட்டு, உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களால் மதிக்கப்படும் பிரதமர் நரேந்திர மோடி, மார்னிங் கன்சல்ட் குளோபல் லீடர் அப்ரூவல் டிராக்கரில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார் . உலகளவில் மிக உயர்ந்த மதிப்பீடு பெற்ற மற்றும் மிகவும் நம்பகமான தலைவர் என பாஜகவின் தேசிய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் பொறுப்பாளரும், அரசியல் மற்றும் பொருளாதார ஆர்வலருமான அமித் மால்வியா (Amit Malviya) தெரிவித்துள்ளார்.

அவருக்கு அடுத்ததாக 59 சதவிகிதத்துடன் தென்கொரிய அதிபர் லீ ஜே மியூங்க் இரண்டாம் இடமும், 57 சதவிகிதத்துடன் அர்ஜென்டினா அதிபர் ஜாவியர் மிலெய் மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.
இந்தப் பட்டியலில் 44 சதவிகிதத்துடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 8-ஆவது இடத்தையும், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி 41 சதவிகிதத்துடன் 10-ஆவது இடத்தையும் பெற்றுள்ளனர். இந்த ஆய்வறிக்கையைப் பகிர்ந்த பாஜக தலைவர் அமித் மால்வியா, உலகளவில் வலுவான மற்றும் மதிப்புடைய தலைவரின் (பிரதமர் மோடி) கையில் நாடு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் பிரதமராக 4,078 நாட்கள் பதவி வகித்த அதே நாளில், பிரதமர் மோடி உலகின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட ஜனநாயகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார், இது பண்டித ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு இரண்டாவது நீண்ட இடைவிடாத பதவிக்காலமாகும்.
இதன் காரணமாக பிரதமர் மோடி, ஜனவரி 1966 முதல் மார்ச் 1977 வரை தொடர்ச்சியாக 4,077 நாட்கள் பதவியில் இருந்த இந்திரா காந்தியை அவர் முந்தினார்.
1947 இல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு (1950) பிறந்த முதல் மற்றும் ஒரே பிரதமர் என்ற தனித்துவமான பெருமையை நரேந்திர மோடி பெற்றுள்ளார், மேலும் இந்தி பேசாத மாநிலத்திலிருந்து மிக நீண்ட காலம் பிரதமராகப் பணியாற்றியவர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
இந்தியாவின் மிக நீண்ட காலம் பணியாற்றிய காங்கிரஸ் அல்லாத பிரதமர் மற்றும் குறைந்தது இரண்டு முழு பதவிக்காலங்களை முழுமையாகப் பதவியில் முடித்த முதல் காங்கிரஸ் அல்லாத தலைவர் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்து.

பிரதமர் நரேந்திர மோடி தனது பதவி காலத்தில் வெள்ளிக்கிழமையான ஜூலை 25 ஆம் தேதியுடன் 4,078 நாள்களை நிறைவு செய்துள்ளார். இதன் மூலம், முன்னாள் பிரதமரான மறைந்த இந்திரா காந்தியின் பதவிக்காலமான, தொடர்ச்சியாக 4,077 நாள்கள் நாட்டின் பிரதமராகப் பதவி வகித்திருந்த சாதனையை முறியடித்துள்ளார்.
1966 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி முதல் 1977 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதி வரை இந்திரா காந்தி தொடர்ச்சியாக பிரதமராகப் பதவி வகித்திருந்தார். இந்த மைல்கல் சாதனையுடன், பிரதமர் ஜவாஹர்லால் நேருவுக்குப் பிறகு இந்திய வரலாற்றில் தொடர்ச்சியாக நீண்ட காலம் பிரதமராகப் பணியாற்றிய 2-வது பிரதமர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார்.
இந்தியா சுதந்திரம் பெற்றதற்குப் பின்னர், காங்கிரஸ் கட்சியைச் சேராத மற்றும் ஹிந்தி பேசும் மாநிலத்தில் அல்லாத ஒருவர், நீண்ட காலம் பிரதமராகப் பதவி வகித்த சிறப்பையும் பிரதமர் மோடி பெற்றிருக்கிறார். மேலும், 1971 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்திரா காந்திக்குப் பிறகு முழு பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்த முதல் பிரதமரும் இவரே. மறைந்த முன்னாள் பிரதமர் நேருவைத் தவிர்த்து தொடர்ச்சியாக மூன்று முறை ஹாட்ரிக் வெற்றி பெற்ற பிரதமரும் மோடிதான். 2002, 2007, 2012 ஆகிய ஆண்டுகளில் குஜராத் பேரவைத் தேர்தலில் வெற்றியும், 2014, 2019, 2024 ஆகிய ஆண்டுகளில் மக்களவைத் தேர்தல்கள் என தொடர்ச்சியாக ஆறு தேர்தல்களில் ஒரு கட்சியின் தலைவராக, இந்தியாவின் அனைத்து பிரதமர்கள் மற்றும் முதல்வர்களில் ஒரே தலைவர் என்ற பெருமையும் மோடியே தன்வசம் வைத்துள்ளார்.