டில்லி:
உச்சநீதி மன்றத்தில் கர்நாடக சட்டசபை சபாநாயர் விவகாரம் குறித்த வழக்கில் நடைபெற்று வருகிறது. இதில் சபாநாயகர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை காங், ஜேடிஎஸ் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் கபில்சிபல் முன் வைத்தார்.
மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பை போபையா நடத்தக்கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்தார். மத்திய அரசு சார்பில் மத்திய அரசு வழக்கறிஞர் வேணுகோபாலுடன் மூத்த வழக்கறிஞர் முகில் ரோத்தகி, மற்றும் துஷார் மேத்தா ஆஜராகி உள்ளனர்.
இன்றைய வழக்கின் விசாரணையை காண மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானியும் உச்சநீதி மன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
அதைத்தொடர்ந்து, கர்நாடகா சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பை வீடியோ பதிவு செய்யவேண்டும், சட்டபேரவை நிகழ்வுகளை நேரலையில் ஒளிப்பரப்பு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் போபையாவை நீக்கக்கூறிய காங்கிரசின் கோரிக்கையை ஏற்க உச்சநீதி மன்றம் மறுத்துவிட்டது.