படத்தின் பெயரே வித்தியாசமாக “ நாய்க்குட்டிபடம் “ என்று வைத்திருக்கிறார்கள். இயக்குநர் ரங்காவை கேட்டால், ” டோனி என்ற ஆண் நாய்க்குட்டி, ஜீனோ என்ற பெண் நாய்க்குட்டிதான் நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள். காதலர்களாக நிதின் சத்யா ஸ்ருதி ராமகிருஷ்ணன் நடிக்கிறார்கள்” என்கிறார்.
மேலும்,” இந்த படத்தில் நாய்களுக்கு திருமணம் செய்து வைத்து, அதற்கு முதலிரவு ஏற்பாடு செய்து வைத்து “ குட்டி குட்டி நாய்க்குட்டி சுட்டி தனம் செய்யுது “ என்று டூயட்டும் வைத்திருக்கிறோம்” என்கிறார்.
வித்தியாசமான முயற்சிதான்!