இந்தியா-இங்கிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி ரத்து  

Must read

மான்செஸ்டர்: 
கொரோனா பரவல் காரணமாக இந்தியா-இங்கிலாந்து இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி ரத்து  செய்யப்படுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை 4 போட்டிகள் முடிவடைந்துள்ளன. அதில் இந்தியா 2 வெற்றிகளும், இங்கிலாந்து 1 வெற்றியும் பெற்றுள்ளது. இதன்மூலம் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்று வருகிறது.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அடுத்தக்கட்டமாக இந்திய அணியின் ஜூனியர் பிசியோதெரபிஸ்ட் யோகேஷ் பார்மருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டார். இதனால் இந்திய அணியின் வியாழக்கிழமை பயிற்சி ரத்தானது. அனைத்து இந்திய வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அனைவருக்கும் கொரோனா இல்லை என்பது உறுதியானது.
அதனால் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுவிட்டால் தொடரை கைப்பற்ற வாய்ப்புள்ளது. அதேவேளையில் சொந்த மண்ணில் தோல்வி அடையக்கூடாது என இங்கிலாந்து அணியும் வெற்றி பெற முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்களிடையே இப்போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இன்று (10.09.2021) மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற இருக்கும் கடைசி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article