டெல்லி: மத்தியஅரசு ஊழியர்களுக்கு 11% அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று காரணமாக அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

பிரதமர்  மோடி தலைமையிலான மத்திய கேனிடட் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ககொரோனா பாதிப்புக் காரணமாக, அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அதனை 17%ல் இருந்து 28%ஆக உயர்த்தி வழங்க முடிவு  செய்யப்பட்டது.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மத்தி அமைச்சர் அனுராக் தாக்கூர், மத்தியஅரசு   ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 17%ல் இருந்து 28%ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும்,  இந்த உயர்வு  ஓய்வுதியதாரர்களுக்கும் பொருந்தும் எனவும் தெரிவித்து உள்ளார்.

இந்த அகவிலைப்படி உயர்வு  ஜூலை 1ந்தேதி முதல் கணக்கிடப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.