டெல்லி: நெஞ்சுவலி காரணமாக ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளதாகவும் ராணுவ மருத்துவமனை அறிவித்து உள்ளது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நெஞ்சுவலி காரணமாக டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், அதற்கு சிகிச்சை வழங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர். குடியரசுத் தலைவரின் உடல்நிலை குறித்து பிரதமர் மோடியும் கேட்டறிந்தார்.
இந்த நிலையல் குடியரசு தலைவரின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்துள்ள ராணுவ மருத்துவமனை, அவருக்கு மேற்கொண்டு சில சோதனைகள் செய்ய எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்ற உள்ளதாகவும், அங்கு ஒரு சில நாட்கள் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார் என்றும் கூறியுள்ளது.