ஈஸ்ட் கோஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நரேந்திர நாத் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் படம் மிஸ் இந்தியா.
தமிழ், தெலுங்கு உட்பட 4 மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் கீர்த்தி சுரேஷின் 20-வது படமாகும் .
இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷுடன் ஜெகபதி பாபு, நவீன் சந்திரா, ராஜேந்திர பிரசாத், நரேஷ் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.


விரைவில் படத்தின் பாடல்கள் வெளியாகும் என்றும் படத்தின் பின்னணி இசைப் பணிகள் தொடங்கியிருப்பதாகவும் மிஸ் இந்தியா திரைப்படத்தின் இசையமைப்பாளர் தமன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]