விஜயின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தின் ரிலீஸ் கொரோனா காரணமாக தள்ளிப்போனது.இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி சமூகவலைத்தளங்களில் செம ஹிட் அடித்துள்ளது.

விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர்.இந்த படத்தை இயக்கப்போவது யார் என்று பல கேள்விகள் சுற்றி வந்தன.

தற்போது இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.தளபதி 65 படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்குவார் என்றும் அனிருத் இந்த படத்திற்கு இசையமைப்பார் என்றும் தெரியவந்துள்ளது. இந்த படத்தின் அறிவிப்பை ஒரு வீடியோவாக படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

https://twitter.com/sunpictures/status/1336996618105626628