மியான்மரை மையமாகக் கொண்டு இன்று மதியம் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கத்தை அடுத்து 6.4 அளவிலான மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகரை புரட்டிப்போட்டுள்ளது.

இந்த சக்தி வாய்ந்த நிலநடுத்தக்கத்தில் பல அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும், மொட்டைமாடிகளில் இருந்த நீச்சல் குளத்தில் இருந்த நீர் பல நூறு மீட்டர்கள் தெறித்ததாகவும் கூறப்படுகிறது.

பாங்காக்கில் அரசு அலுவலகங்களுக்காக கட்டப்பட்டு வந்த 30 மாடி வானளாவிய கட்டிடம் இடிந்து விழுந்ததில் 43 தொழிலாளர்கள் சிக்கியுள்ளதாக காவல்துறை மற்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தாய்லாந்தில் இயற்கை பேரிடர் தொடர்பான அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது.

மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் அதேவேளையில், மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதை அடுத்து மக்கள் வீடுகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மியான்மரில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு பாங்காக்கிலும் பலத்த நிலநடுக்கம் உணரப்பட்டது

[youtube-feed feed=1]