பரிமலை

ரூ. 5 கோடி மதிப்பிலான சபரிமலை அரவணையை உரமாக மாற்ற தனியார் நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2022-2023ம் ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜை சீசனில் அரவணையில் அதிக அளவு பூச்சி மருந்து இருப்பதாக கேரள அரசு அறிக்கை வெளியிட்டது. இதற்கு காரணம் பூச்சிக்கொல்லி கலந்த ஏலக்காய் என தெரியவந்தது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நடத்தப்பட்ட சோதனையில் அரவணை பாதுகாப்பானது என சொல்லப்பட்டாலும், 6 மாதங்கள் ஆனதால் அவற்றை உண்ண முடியாது என தெரிவிக்கப்பட்டது.

எனவே 6.65 லட்சம் அரவணை டின்களையும் அழிக்க நவம்பரில் உச்சநீதிமன்ற அனுமதித்ததையடுத்து 5 கோடி ரூபாய் மதிப்பிலான அரவணையை அறிவியல் பூர்வமாக அழிக்க தேவசம்போர்டு டெண்டர் விட்டது.

வனவிலங்குகள் நடமாட்டம் இருப்பதால், அரவணையை பம்பைக்கு  வெளியே கொண்டு சென்று அழிக்க வேண்டும் என்றாலும் அரவணை டின்களில் ஐயப்பன் படம் இருப்பதால் நம்பிக்கைக்கு பங்கம் ஏற்படாத வகையில் அவற்றை அழிக்க வேண்டும் என்றும் தேவசம்போர்டு கூறியிருந்தது.  அரவணைகளை உரமாக மாற்ற ஏட்டுமனூரிலுள்ள தனியார் நிறுவனம் ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு டெண்டர் எடுத்துள்ளது.