கோவை
இன்று அதிகாலையில் அர்ஜுன் சம்பத் மகன் ஓம்கார் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளது இந்து மக்கள் கட்சியில் கடும் பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவையில் நக்கீரன் வார இதழ் ஈஷா யோகா மையம் குறித்து அவதூறு பரப்பி வருவதாக கோவையில் இந்து மக்கள் கட்சி போராட்டம் நடத்தியது. இந்த போராட்டம் இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் நடைபெற்றது. அதில் அர்ஜுன் சம்பத்தின் மகனும், அக்கட்சியின் இளைஞர் அணி தலைவருமான ஓம்கார் பாலாஜியும் கலந்துகொண்டு பேசினார்
ஓம்கார் பாலாஜி அப்போது நக்கீரன் ஆசிரியர் கோபால் குறித்து அவதூறாகவும், அவரது நாக்கை அறுத்து விடுவதாகவும் பேசியிருந்தார். eனவேஇது தொடர்பாக, திமுகவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் அளித்த புகாரின்பேரில், பந்தய சாலை காவல் துறையினர் ஓம்கார் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இன்று அதிகாலை கோவை கெம்பட்டி காலனி பகுதியில் உள்ள வீட்டில் இருந்த ஓம்கார் பாலாஜியை இன்று அதிகாலை ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், குற்ற நோக்குடன் செயல்படுதல் என்ற இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், ஓம்கார் பாலாஜயிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் இந்து மக்கள் கட்சியினரிடையே கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.