கொரோனா வைரஸ் பரவல் ஓய்ந்த பாடில்லை. ஒரு நாள் குறைவதும் மறுநாள் அதிகரிப்பதுமாக உள்ளது. எல்லா மாநிலங் களிலும் இதுவே நிலைமையாக இருக்கிறது. இதற்கிடையில் லாக் டவுனால் படப்பிடிப் புகள் தொடங்க முடியாத நிலை இருந்து வருகிறது. தெலுங்கு படங்களின் படப் பிடிப்புக்கு கடந்த வாரம் அனுமதி வழங்கப் பட்டது. ஆனால் படப்பிடிப்பு தொடங்க தயக்கம் காட்டி வருகின்றனர்.


இந்நிலையில் டோலிவுட் நடிகர் பந்த்லா கணேஷுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் பாசிடிவ் என தெரிந்தது. இதனால் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஐதராபாத்தில் பந்த்லா கணேஷ் வசிக்கிறார். அதே பகுதியில் நடிகர் நாக சவுரியா வசித்து வந்தார். கணேஷுக்கு கொரோனா என்ற தகவல் வந்தவுடன் தனக்கு கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்காக அந்த பகுதியிலிருந்து வீட்டை காலி செய்துவிட்டு வேறு இடத்துக்கு ஜூட் விட்டார் நாக சவுரியா.
கொரோனா தொற்று தீவிரத்தால் சீனியர் நடிகர்கள் படப்பிடிப்பில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டவில்லை. இந்த குழப்பத்தால் இந்த ஆண்டு இறுதிவரை படப்பிடிப்பு தொடங்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டிருக் கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை சினிமா படப்பிடிப்புக்கு இன்னும் அனுமதி வழங்கப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]