சென்னை

ன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலினைத் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சந்தித்துள்ளார்.

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சென்னை வந்துள்ளார்.  அவர் இன்று தனது குடும்பத்தினருடன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் மு க ஸ்டாலின் இல்லத்துக்குச் சென்றுள்ளார்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், அவர் மகன் உதயநிதி மற்றும் குடும்பத்தினர் அவர்களை வரவேற்றுள்ளனர்.

தற்போது ஐதராபாத் நகர் அருகே லட்சுமி நரசிம்ம சாமி கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்ளத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு தெலுங்கானா முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.