ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வீரர்கள் சென்னையில் நடந்த ஏலத்தில் ஏலம் எடுக்கப்பட்டனர். வெளிநாட்டு வீரர்கள் பெரும் தொகைக்கு ஏலம் போன நிலையில் உள்ளூர் வீரர்கள் விலை போகவில்லை.

இதனால் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ஆளும் கட்சியான டி.ஆர்.எஸ். கட்சி எம்.எல்.ஏ. தனம் நாகேந்தர் கொந்தளித்துள்ளார்.

நாகேந்தர்

“ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியில், எங்கள் ஊர் வீரர்களை ஏன் ஏலம் எடுக்க வில்லை. இங்கே திறமையான வீரர்கள் இல்லையா?” என அவர் வினா எழுப்பியுள்ளார்.

“எங்கள் வீரர்களை சன் ரைசர்ஸ், தனது அணியில் சேர்த்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், உங்கள் அணியின் பெயரில் இருந்து ஐதராபாத்தை நீக்கிவிட வேண்டும்” என அவர் எச்சரித்துள்ளார்.

முன்னாள் அமைச்சரான நாகேந்தர் “ஒன்று – எங்கள் ஊர் வீரர்களை சேர்க்க வேண்டும், இல்லை என்றால் ஐதராபாத் பெயரை உங்கள் அணியின் பெயரில் இருந்து நீக்கிவிடவேண்டும். அப்படி செய்யாத பட்சத்தில் உங்கள் அணி பங்கு கொள்ளும் போட்டியை நடத்த விட மாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.

– பா. பாரதி