சென்னை:
தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் வரும் 2ஆம் தேதி முதல் தினமும் பள்ளிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. பல மாவட்டங்களில் கிட்டத்தட்ட இயல்பு நிலை திரும்பி விட்டது. கொரோனா தாக்கம் குறைந்து விட்டதால் பள்ளி, கல்லூரிகள் விரைவில் திறக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பொதுமுடக்கத்தில் கூடுதல் தளர்வுகளை அறிவிப்பது பற்றி நிபுணர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது பள்ளி, கல்லூரிகளை திறப்பது பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் வரும் 2ஆம் தேதி முதல் தினமும் பள்ளிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை, பாடப்புத்தகம் வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ள ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.