சென்னை

டாஸ்மாக் நிர்வாகம் தனது பணியாளர்கள் ரசீதுடன் மதுபானங்களை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம், சிவகங்கை, கரூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ராமநாதபுரம், சிவகங்கை, கரூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் கணினிமயமாக்கும் முயற்சி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கணினிமயமாக்கும் நடவடிக்கைகள் மீதமுள்ள மாவட்டங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தொடர்ந்து டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்கும்போது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்து வந்ததை தடுக்கும் விதமாக டாஸ்மாக் கடைகளில் ரசீது கொடுக்கும் முறை அமல்படுத்தப்பட்டது.  டாஸ்மாக் கடைகளில் நுகர்வோர் கேட்கும் மதுபானத்தை ரசீதுடன் வழங்க வேண்டும் என்று பணியாளர்களுக்கு, டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

டாஸ்மாக் நிர்வாகம் இது குறித்து வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,

“மதுபானங்களை முன் கூட்டியே ஸ்கேன் செய்து வைத்துக்கொண்டு நுகர்வோருக்கு விற்பனை செய்யக் கூடாது. நுகர்வோர் கேட்கும் மதுபானத்தை ரசீதுடன் வழங்க வேண்டும், விற்பனை புள்ளி விவரத்திற்கும், கையடக்க கருவி புள்ளி விவரத்திற்கும் வேறுபாடு இருக்க கூடாது. அவ்வாறு வேறுபாடு இருந்தால் 50 சதவீதம் அபராதம், ஜி.எஸ்.டி.யுடன் வசூலிக்கப்படும் ’

என  உத்தரவிடப்பட்டுள்ளது.