தஞ்சை:
விபத்தில் சுய நினைவு இழந்தவர் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி நஷ்ட ஈடு வழங்க தஞ்சை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் ராஜீவ் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 40). சவுதி அரேபியா உலக வர்த்தக மைய கண்காணிப்பாளர். 2017ம் ஆண்டு தஞ்சை வந்த இவர் பிப்ரவரி 21ம் தேதி பைக்கில் பட்டுக்கோட்டைக்கு சென்றார்.
பட்டுக்கோட்டை காமாட்சி நாயுடு பாளையம் அருகே சென்ற போது பைக் மீது கார் மோதியது. இதில் காயமடைந்த சுரேஷ் தஞ்சை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சுய நினைவு இழந்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த தஞ்சை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு உரிமை தீர்ப்பாய நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த், சுரேஷ் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.