சென்னை:

மிழகத்தில் நேற்று புதிதாக பதவி ஏற்றுள்ள புதிய தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் புதிய டிஜிபி திரிபாதி ஆகியோர் தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தமிழக அரசின் தலைமைச் செயலராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் நேற்று பணி ஓய்வு பெற்றதை அடுத்து, புதிய தலைமைச் செயலராக நிதித்துறை செயலாளர் கே.சண்முகம் புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று  பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதேவேளையில்,  தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநராக இருந்த டி.கே.ராஜேந்திரன் நேற்றுடன்  ஓய்வு பெற்றதை அடுத்து, புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்ட ஜே.கே. திரிபாதியும் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்த நிலையில், புதிய தலைமை செயலாளரும், புதிய டிஜிபியும் இன்று தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து  வாழ்த்துப் பெற்றனர்.