சென்னை: ஜனநாயகத்தை காப்பதில் தமிழ்நாடு முன்னோடியா உள்ளது என்றும், உலகிற்கே முன்னுதாரணமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் கூறினார்.

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தொடர்பாக சென்னையில், அரசியல் கட்சிகள், அதிகாரிகள், காவல்துறை தலைவர்கள் என பலரிடம் கடந்த 2 நாட்கள் ஆலேசானை நடத்தியது தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் வந்த அதிகாரிகள். இன்று காலை சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சென்னையில் இன்று 2 வது நாளாக ஆலோசனை மேற்கொண்டார். வருமான வரித்துறை, துணை ராணுவம் உள்ளிட்ட 23 துறைகளின் அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதையடுத்து, இன்று பகல் 12மணி அளவில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் கூறியதாவது:- உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா, ஜனநாயகத்தின் தாய் இந்தியா. இந்தியாவில் ஜனநாயகத்தைக் காப்பதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. 72 நாடுகள் பங்கேற்ற தேர்தல் பற்றிய பெருங்கூட்டத்தில் தமிழ்நாட்டைப் பற்றிப் பெருமையாகப் பேசினோம் என்று புகழாரம் சூட்டினார்.
தமிழ்நாட்டில் நடைபெற உள்ள ஜனநாயகத் திருவிழாவை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கூறியவர், தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் சிறப்பான முறையில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் நடந்த S.I.R. மிகப்பெரிய வெற்றி, இது நாட்டுக்கே முன்னுதாரணம். தமிழ்நாட்டில் SIR பணியை சிறப்பாக மேற்கொண்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.
தற்போதைய நிலையில், தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள் இருக்கின்றனர். இவர்களில், தமிழ்நாட்டில் 2 கோடியே 89 லட்சம் பெண் வாக்காளர்களும் 2 கோடியே 77 லட்சம் ஆண் வாக்காளர்களும் உள்ளனர். திருநங்கைகள் 7,617 பேர் மற்றும் மூத்த குடிமக்கள் (81-85 வயதுக்கு மேற்பட்டவர்கள்) கிட்டத்தட்ட 4 லட்சம் பேர்…தமிழ்நாட்டில் 12.5 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள், அதாவது 18-19 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் 20-29 வயதுக்குட்பட்டவர்கள், கிட்டத்தட்ட 1 கோடி வாக்காளர்கள்…”
இவர்களில் தமிழ்நாட்டில் 2.87 கோடி பெண் வாக்காளர்கள் உள்ளனர். மொத்த வாக்காளர்களில் 22-29 வயதுக்குட்பட்டவர்கள் ஒரு கோடி பேர். இருக்கிறார்கள். அதுபோல, 18 முதல் 19 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் தமிழ்நாட்டில் 12.5 லட்சம் பேர் இருக்கிறார்கள் இவர்கள் முதல்முறை வாக்காளர்கள் என்றார்.
தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் தேர்தல்களில் இளைஞர்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படும். கல்லூரிகளில் பிரச்சாரத்திற்காக 3,060 அர்ப்பணிப்புள்ள உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகள் இருப்பார்கள்.
தமிழ்நாட்டில், இந்த தேர்தலுக்கு 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளது. அங்கு தேர்தல் நடைபெறும் என்றவர், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்படும். அனைத்து வாக்குச்சாவடிகளும் வெப் காஸ்டிங் முறையில் கண்காணிக்கப்படும் என்றார. வாக்குச்சாவடிகளில் குடிநீர், கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்.
வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் வண்ண புகைப்படம் இருக்கும் என்பதால் பொதுமக்கள் வாக்களிக்க எளிது என்றார். வாக்குப்பதிவு நாளன்று, ஒவ்வொரு 2 மணிநேரத்திற்கு ஒரு முறை வாக்குப்பதிவு நிலவரங்கள் பதிவேற்றம் செய்யப்படும் என்றும் கூறினார்.
வாக்கு எண்ணிக்கை நாளன்று, முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் என்றவர், அது இரண்டு கட்டங்களாக எண்ணப்படும் என்றார்.
பின்னர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தவர், தமிழகத்தில் பேரவைத் தேர்தலை ஒரே கட்டமாக நடத்துவது குறித்து ஆலோசிப்பதாக கூறியுள்ளார்.
இப்போது இறுதி வாக்காளர் பட்டியல் பிப். 23 அன்று வெளியான நிலையிலும், அதில் பெயர் இடம்பெறவில்லை என்றால் தகுதியுள்ள ஒருவர் படிவம் 6 மூலமாக உரிய ஆவணங்களுடன் தங்கள் பெயரைச் சேர்க்கலாம். படிவம் 7 மூலமாக நீக்கம் செய்யலாம், படிவம் 8 மூலமாக வாக்குச்சாவடி மாற்றத்திற்கு, தொகுதி மாற்றத்திற்கு விண்ணப்பிக்கலாம். இந்த 3 படிவங்களும், தேர்தல் அறிவித்து வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கலுக்கு 10 நாள்களுக்கு முன்வரை சமர்ப்பிக்கலாம். நீங்கள் விண்ணப்பித்து 7 முதல் 10 நாள்களுக்குள் சரிசெய்யப்படும் என்றார்.
மேலும், திருமணம் ஆனவர்களும் எளிதாக ஆன்லைன் அல்லது தேர்தல் ஆணைய செயலி மூலமாக தங்களுடைய தொகுதி மாற்றத்திற்கு உரிய ஆவணங் களுடன் விண்ணப்பிக்கலாம். வாக்குச்சாவடி அலுவலர் நேரில் வந்து சரிபார்த்து உரிய நடவடிக்கை எடுப்பார்” என்று கூறினார்.
“தகுதியான ஒருவர் எப்போது வேண்டுமானாலும் வாக்காளர் பட்டியலில் தனது பெயரைச் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்றவர், தற்போது வரை எஸ்ஐஆர் பணிகளில் 267 புகார்கள் மட்டுமே வந்துள்ளன” என்று கூறினார்.
மேலும் பத்திரிகையாளர்களுக்கு தபால் வாக்கு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செய்தியாளர்கள் கோரிக்கை வைத்ததற்கு, ‘அதுகுறித்து ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும்’ என்று கூறினார்.
இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகிற்கே முன்னுதாரணமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்தார்.
[youtube-feed feed=1]