சென்னை:
அரசு ஊழியர்கள் ஜீன்ஸ் டீசர்ட் அணியக்கூடாது, பாரம்பரிய உடைகளை அணியலாம் என்றும் தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டு உள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் பாரம்பரிய உடைகளை அணியலாம் என அனுமதி வழங்கி உள்ளது. அனுமதியளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், பெண் ஊழியர்கள் சேலை, சல்வார் கம்மீஸ், சுடிதார் ஆகிய உடைகளை மட்டும் அணிய வேண்டும் என்றும், சேலையைத் தவிர மற்ற உடைகளை அணியும் போது துப்பட்டாவையும் சேர்த்து அணிவது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண் பணியாளர்கள் அனைவரும் பேண்ட் மற்றும் சட்டை அணிய வேண்டும் என்றும், டீ-சர்ட் போன்ற உடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உடைகளின் நிறம் மெல்லிய வண்ணமாக இருக்க வேண்டும், அடர் வண்ணத்துடன் என்ற கண்களைப் பறிக்கும் நிறத்தில் இருக்கக்கூடாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வேஷ்டி, சேலை உள்ளிட்ட பாரம்பரிய உடைகள் அணிவதற்கு எந்த ஒரு தடையும் கிடையாது.
தமிழ் கலாசாரம் மற்றும் இந்திய பாரம்பரிய உடைகளான வேஷ்டி, சேலை போன்ற நேர்த்தியான, சுத்தமான ஆடைகளாகவும், அலுவலகத்தின் நன்மதிப்பை பராமரிக்கும் வகையிலான ஆடைகளை அணிந்து வரலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.