சென்னை: அதானி மீதான சர்ச்சைகள், மற்றும் எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தல் காரணமாக, தமிழ்நாடு அரசு  ஸ்மார்ட் மீட்டர்  வாங்க இருந்த அதானி நிறுவனத்துடனான டெண்டரை  ரத்து செய்தது. இதனால்,  தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது பரபரப்பையும், அதிர்ச்சியையும்  ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே நிதி சிக்கலில் உள்ள தமிழ்நாடு அரசுக்கு, இந்த ஒரு டெண்டர்  ரத்து செய்யப்பட்டதால்,  மேலும், மொத்தம் 39,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகின்றன.

தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB) தனது லட்சிய ஸ்மார்ட் மீட்டர் முயற்சியின் பயனாக கொள்முதலுக்கான டெண்டர் விடப்பட்டது. இதில், குறைந்த அளவில் கோட் செய்திருந்த  அதானி குழுமத்தின் துணை நிறுவனமான அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் லிமிடெட் (AESL) நிறுவனத்துடன் வாங்க  முடிவு செய்யப்பட்டது. அதற்கான ஒப்பந்தம் போடப்படும் நிலை ஏற்பட்டது. ஆனால், சர்ச்சைக்குரிய   அதானி நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் போடக்கூடாது என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

இதையடுத்து,  தமிழ்நாடு அரசு, இந்த டெண்டரை ரத்து செய்தது. அதாவது,  அதானி உள்ளிட்ட தனியார் நிறுவனங்களிடம் இருந்து ஸ்மார் மீட்டர்களை வாங்கும் டெண்டரை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (Tangedco) ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த நடவடிக்கை  காரணமாக,  மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இருந்து கூடுதலாக 0.5 சதவிகிதம் கடன் வாங்குவது தடைப்பட்டு இருப்பதாகவும்,   இதனால், தமிழக அரசுக்கு சமார்   39,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள்  தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களின் மின்சாரப் பயன்பாட்டைத் துல்லியமாகக் கணக்கிடும் வகையிலும், மின்சார வாரியங்களின் தொழில்நுட்ப மற்றும் வணிக இழப்புகளைக் குறைக்கும் வகையிலும் அனைத்து   மின் இணைப்புகளுக்கும் ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்துவதை கட்டாயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி யுள்ளது. 

புதுப்பிக்கப்பட்ட மின் விநியோகம் என்ற இந்த திட்டத்தில் சேர்வதன் மூலம் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இருந்து 0.5 சதவிகிதத்தை கடனாக மத்திய அரசிடம் இருந்து மாநில அரசுகள் பெற்று கொள்ளலாம். அதோடு, 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட வேண்டும் என்றும் இதற்காக ஒரு மீட்டருக்கு சராசரியாக 900 ரூபாயை மானியமாக மத்திய அரசு வழங்குகிறது. இதன்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 3 கோடி இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படவுள்ளன.  அதாவது, 2025ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கணிசமான எண்ணிக்கையிலான மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட வேண்டும்.

.தமிழ்நாட்டில் உள்ள மூன்று கோடி மின் நுகர்வோரின் தேவையை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு மத்திய அரசுடன் இணைந்து ஸ்மார் மீட்டர் அமைக்கும் திட்டத்தை ரூ19,000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த உள்ளது.    இதையடுத்து முதற்கட்டமாக   தமிழகத்தின் மாவட்டங்கள் மொத்தம் 4 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்டில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டன.

அதன்படி, அதானி நிறுவனம் உள்பட  பல நிறுவனங்கள் தங்களது  விலைகள்  மற்றும் பராமரிப்பு குறித்து விலைப்புள்ளிகளை அனுப்பியது. இவற்றை ஆய்வு செய்த தமிழ்நாடு மின்சார வாரியம், குறைந்த விலையை கோட் செய்திருந்த, அதானி குழுமத்தைச் சேர்ந்த அதானி எனர்ஜி சொலுசன்ஸ் லிமிடெட் (Adani Energy Solutions Limited) நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால், இந்திய அதிகாரிகளுக்கு அதானி லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்கா குற்றம் சுமத்திய நிலையில், தேசிய அளவில் அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்தவிவகாரத்தில் தமிழ்நாடு, தெலுங்கான உள்பட பல மாநிலங்களின் பெயர்களும் அடிபட்டதால், இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரதமர் மோடியின் நண்பரான அதானி நிறுவனத்தின்மீது எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுக்களை கூறி வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளே அவரது நிறுவனத்தில் ஒப்பந்தம் போட இருந்தது கடுமையான எதிர்ப்பை சம்பாதித்தது.

இப்படிப்பட்ட சூழலில்தான்  ஸ்மார் மீட்டருக்கான டெண்டரை TANGEDCO. ரத்து செய்து அறிவித்தது.  குறைவான தொகையை அதானி நிறுவனம் குறிப்பிட்டு இருந்தாலும் அந்த தொகை மின்சார வாரிய பட்ஜெட்டுக்கு அதிகமாக இருப்ப ஜால்ஜாப்பு  விளக்கம் அளிக்கப்பட்டது. 

இந்த நிலையில், ஸ்மார் மீட்டர்டெண்டரை ரத்து செய்திருப்பதால் தமிழக அரசுக்கு மொத்தம் 39,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதுப்பிக்கப்பட்ட மின் விநியோக திட்டத்தின் இலக்குகளை பூர்த்தி செய்யாத காரணத்தால் மத்திய அரசிடம் இருந்து வரக்கூடிய 30,000 கோடி ரூபாயை தமிழக அரசு பெற முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இதை தவிர, மத்திய அரசின் திட்டத்தின் நிறைவேற்றினால் மாநில அரசுகளுக்கு குறிப்பிட்ட நிதி உதவி வழங்கப்படும். அந்த வகையில், புதுப்பிக்கப்பட்ட மின் விநியோக திட்டத்தை செயல்படுத்துவதால் தமிழக அரசுக்கு 9,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. ஆனால், டெண்டரை ரத்து செய்திருப்பதால் அந்த தொகையும் கடனாக மாற்றப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே நிதிச்சுமையால் தத்தளித்து வரும் தமிழ்நாடு அரசுக்கு, இந்த ரூ.39ஆயிரம் கோடி நிதி இழப்பு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

31 மார்ச் 2024-ம் தேதி நிலவரப்படி தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் நிலுவைத் தொகை ரூ.8,34,544 கோடியாகும். 2024-25 ஆம் ஆண்டில் மொத்தம் ரூ.1,55,584.48 கோடி கடன் பெற்று ரூ.49,638.82 கோடியை திருப்பிச் செலுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது

. இதன் விளைவாக 2025 மார்ச் 31-ம் தேதி அன்று தமிழகத்தின் நிலுவையில் உள்ள கடன் தொகை ரூ.8,33,361.80 கோடியாக இருக்கும். 2021-ல் ஆட்சிக்கு வந்த திமுக அரசு ரூ.3,76,700.81 கோடி கடன் வாங்கியிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

தமிழக அரசு 2024-2025 நிதியாண்டின் நான்காவது காலாண்டில்  ரூ.45,000 கோடி கடன் வாங்க திட்டமிட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்டுள்ள மாநிலங்களின் சந்தைக் கடன் அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதானி சர்ச்சை எதிரொலி: ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டரை ரத்து  செய்தது தமிழ்நாடு மின்வாரியம்