சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2026ம் ஆண்டின் முதல் அமைச்சரவை கூட்டம் ஜனவரி 5ந்தேதி அன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அப்போது ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர், கவர்னர் உரை குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழ்நாடு சட்டமன்ற தேரதல் விரைவில் நடைபெற உள்ளதால், அரசு தாக்கல் செய்ய உள்ள இடைக்கால பட்ஜெட் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
சட்டசபை தேர்தல் தேதி பிப்ரவரி மாத இறுதியில் அறிவிக்க வாய்ப்புள்ள நிலையில் இந்த அமைச்சரவை கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
[youtube-feed feed=1]