சென்னை:
பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குநர் மகேந்திரன் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
தமிழ் திரையுலகில் மூத்த இயக்குனரான மகேந்திரன் தொடக்க காலத்தல் எம்ஜிஆர், சிவாஜி போன்ற மாபெரும் நடிகர்கள் நடித்த படத்துக்கு வசன்ம் எழுதி வந்த நிலையில், ரஜினியின் முல்லும் மலரும படத்தை முதன்முதலாக இயக்கி இயக்குனர் அவதாரமும் எடுத்தார். அதன்பிறகு ஏராளமான படங்களை இயக்கி உள்ளார்.
சமீபத்தில், விஜய் நடித்த தெறி, உதயநிதியின் நிமிர் உள்பட சில படங்களில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றார்.
அவருக்கு இன்று மாலை திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. அதையடுத்து, அவரது குடும்பத்தினர் அவரை உடடினயாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Tamil film has been