போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபால் அருகே ஓடும் ரயிலில் மனைவிக்கு முத்தலாக் கூறி, மனைவியைத் தாக்கிவிட்டு கணவர் முகமது அர்ஷத் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் தலைமறைவான கணவர் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலை நோக்கி சென்றுகொண்டிருந்த ரயில் ஜான்சி ரயிலில் பயணித்த ஒரு இஸ்லாமிய தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி சண்டை எழுந்தது. விசாரணையில், அவர்களது பெயர் முகமது அர்ஷத் (28), இவரது மனைவி அஃப்சனா (26). இவர்கள் கடந்த 29ம் தேதி அன்று போபால் நோக்கி ரயிலில் ஒருவருக்கொருவர் வாய்ச்சண்டை போட்டுக்கொண்டே சென்று கொண்டிருந்தனர். இதைக்கண்ட அந்த ரயிலில் பயணம் செய்த சக பயணிகள் அவர்களை சமாதானப்படுத்தினார்.
இதற்கிடையில் அந்த ரயில் ஜான்சி ரயில் நிலையத்துக்கு சற்று முன்பு வந்துகொண்டிருந்த போது, அர்ஷத், தனது மனைவி அஃப்சனாவை கடுமையாக தாக்கியதுடன், முத்தலாக் என கூறிவிட்டு, ஜான்சி ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து இறங்கி ஓடிவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அஃப்சானா செய்வதறியாது திகைத்தார். பின்னர் அவர் சக பயணிகள் உதவியுடன், ரயில் நிலையத்திலிருந்த ரயில்வே போலீஸாரிடம் புகார். தெரிவித்தார்.
இதையடுத்து விசாரணை மேற்கொண்ட ரயில்வே போலீசார், அர்ஷத், போபாலில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கணினி மென்பொறியாளராக பணிபுரிந்து வருவதாகவும், இவர்களுக்கு 2024 ஜனவரி 12ம் தேதிதான் திருமணம் நடைபெற்றுள்ளதும் தெரிய வந்தது. அர்ஷன் மனைவியான அஃப்சனா ராஜஸ்தானின் கோட்டாவைச் சேர்ந்த பட்டதாரி பெண். இவர்கள் ஆன்லைன் மேட்ரிமோனி மூலம் தேர்வு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இதற்கிடையில், அர்ஷத்துக்கு ஏற்கெனவே திருமணமானது அஃப்சனாவுக்கு சமீபத்தில் தெரியவந்தது. இதனால் இருவருக்கும் இடையே மோல் ஏற்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்தே ஓடும் ரயிலில் மனைவிக்கு முத்தலாக் கூறிவிட்டு அர்ஷத் தப்பிச் சென்றது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்து அர்ஷத்தை தேடும் பணியை ரெயில்வே காவல்துறையினர் தொடங்கி உள்ளனர்.
ஓடும் ரயிலில் பெண்ணுக்கு முத்தலாக் கூறிவிட்டு கணவர் தப்பிச் சென்ற சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற அவலங்களை தடுக்கவே யுனிபாஃர்ம் சிவில் கோடு எனப்படும் நாட்டின் அனைத்து சமயம், மொழி, இனம் மற்றும் குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் மக்களுக்கான பொதுவான உரிமையியல் மற்றும் தண்டனைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.