விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான புலிகுத்தி பாண்டி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து அடுத்ததாக நடிகர் விக்ரம் பிரபு இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனரான தமிழரசன் இயக்கத்தில் டாணாக்காரன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் S.R.பிரகாஷ் பாபு, S.R.பிரபு, P.கோபிநாத் மற்றும் தங்க பிரபாகரன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
நடிகை அஞ்சலி நாயர் கதாநாயகியாக நடிக்க, நடிகர் லால், M.S.பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவில் ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.
தற்போது தமிழகத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவம் ஒன்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் விக்ரம் பிரபு வித்தியாசமான போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் தற்போது டாணாக்காரன் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.