சென்னை: லண்டனில் சிம்பொனி இசை அமைத்து சாதனை படைத்துவிட்டு இருந்து சென்னை திரும்பிய இளையராஜாவுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் சென்று வரவேற்றார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய இளையராஜா, சிம்பொனி இசையை டவுன்லோடு செய்து கேட்காதீர்கள் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இசையமைப்பாளர் இளையராஜா, தனது முதல் சிம்பொனி இசையை லண்டனில் நேற்று (மார்ச் 9, 2025) அரங்கேற்றம் செய்தார். ஆசிய கண்டத்தில் இருந்து சிம்பொனியை எழுதி, அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் எனும் சாதனையை படைத்துள்ளார். ‘சிம்பொனி’ இசையை 1½ மணி நேரம் ரசிகர்களை இசை மழையில் நனைய வைத்தார்.. ஏற்கனவே மொஸார்ட், பீத்தோவன், சாய்கோவ்ஸ்கி ஆகிய சிம்பொனி இசைக்கலைஞர்கள் வரிசையில் இளையராஜாவும் இணைந்துள்ளார் அவரது சாதனைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
குடியரசு தலைவர் முர்மு, பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்பட அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
.இந்த நிலையில், லண்டனில் சிம்பொனி இசை நிகழ்ச்சியை முடித்த இசைஞானி இளையராஜா இன்று காலை விமானம் மூலம் சென்னை திரும்பினார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக உற்வேற்பு அளிக்கப்பட்டது.
தமிழக அரசு சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், பா.ஜ.க. கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் திரைத்துறையினர் இளையராஜாவை வரவேற்றனர். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், லண்டனில் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்தி நாடு திரும்பிய இளையராஜாவை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி. முதலமைச்சரின் ஆணைக்கிணங்க அரசின் சார்பில் இசைஞானி இளையராஜாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

இதையடுத்து விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த இளையராஜா, தன்னை லண்டனுக்கு மலர்ந்த முகத்தோடு வழியனுப்பி வைத்தது மகிழ்ச்சி. என்னுடைய இசை குறிப்புகளை சரியாக இசைக் கலைஞர்கள் வாசித்தார்கள். சிம்பொனி – அனைவரும் மகிழ்ச்சியுடன் பாராட்டி ரசித்தனர். சிம்பொனி இசையை கைத்தட்டி ஆரவாரம் செய்தது மகிழ்ச்சி. இந்தியாவிற்கே பெருமை சேர்த்த விஷயமாக மாறிய சிம்பொனி. தமிழக மக்கள் என்னை வாழ்த்துவது மகிழ்ச்சியளிக்கிறது.
“லண்டனைத் தொடர்ந்து ஜெர்மனி, பிரான்ஸ், துபாய் உள்ளிட்ட 13 நாடுகளில் சிம்பொனியை அரங்கேற்ற உள்ளேன்” என கூறிய “சிம்பொனியை யாரும் டவுன்லோட் செய்து கேட்காதீர்கள். அதனை நேரில் உணர வேண்டும். நம்மண்ணிலும் நடக்கும் அதுவரை காத்திருங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். என்னுடைய பாடல்களை வெளிநாட்டு இசைக் கலைஞர்களை இசைக்க வைத்தேன். சிம்பொனி இசையை அமைதியாக இருந்து கேட்பது சிறப்பு. சிம்பொனி இசை – உலகமெங்கும் கொண்டு செல்லப்படும். இது ஆரம்பம்தான் என்றார்.
ரசிகர்கள் என்னை இசை தெய்வம் என அழைக்கின்றனர். நான் சாதாரண மனிதன்தான். பண்ணைபுரத்தில் இருந்து இன்றுவரை எனது கால்களில் நடந்து, எனது கால்களில்தான் நான் நிற்கிறேன். 82 வயது ஆகிவிட்டதே என நினைக்க வேண்டாம்; இனிமேல்தான் ஆரம்பிக்க போகிறேன் என கூறினார்.