டெல்லி

நேரடி வகுப்புகள் நடத்த அனுமதி கோரி டெல்லி பள்ளிகள் வைத்த கோரிக்கை மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தலைநகர் டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் காற்று மாசு மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. நகரைச் சுற்றியுள்ள மாநிலங்களில் \ விவசாய ஆண்டின் இறுதியில் பயிர் கழிவுகளை எரித்து அழித்து, புதிய பயிரிடலுக்கு தயாராவார்கள். இதன் மூலம் டெல்லியில் காற்று மாசு ஏற்பட்டு காற்றின் மாசு 400ஐ தாண்டியி உள்ளது.

முதியவர்கள், குழந்தைகள், நோயாளிகள், கர்ப்பிணிகள், மாணவர்கள் இந்த பிரச்சினையாக கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அரசு காற்று மாசு கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், அவை பெரிய அளவில் கைக்கொடுக்கவில்லை. எனவேஉச்சநீதிமன்றம் டெல்லியில் பிளஸ் 2 வரை மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும் ஆன்லைனில் பாடங்களை நடத்தலாம் என்றும் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி கடும் காற்று மாசு காரணமாக டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள நகரங்களில் பள்ளி வகுப்புகள் ஆன்லைனில் நடைபெற்று வருகிறது.  டெல்லியில் உள்ள பள்ளிகளில் நேரடி வகுப்புகளை நடத்த கோரி பெற்றோர் உசநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இன்று இந்த மனுவை உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து நிராகரித்துள்ளது.