டில்லி

டில்லியில் பாஜக சார்பில் மறந்த அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் மகள் போட்டியிட உள்ளார்.

விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 195 வேட்பாளர்கள் அடங்கிய முதல்கட்ட பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. டில்லியில் பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே, பாஜகவின் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார்.

பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். முதல்கட்ட பட்டியலில் 34 மத்திய அமைச்சர்கள், மக்களவை சபாநாயகர், இரண்டு முன்னாள் அமைச்சர்கள் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். இந்த பட்டியலில் 28 பெண் வேட்பாளர்கள், 47 இளம்  தலைவர்கள் இந்தப் பட்டியலில் உள்ளார்கள்.

டில்லியில்,

  • சாந்தினி சவுக் தொகுதி: பிரவீன் கண்டேல்வல்
  • தெற்கு டில்லி : ராம்வீர் சிங் பிதுரி
  • புதுடில்லி  தொகுதி: பன்சுரி ஸ்வராஜ்
  • மேற்கு டில்லி : கமல்கிட் ஷெராவத்
  • வடகிழக்கு டில்லி தொகுதி : மனோஜ் திவாரி(ஏற்கனவே போட்டியிட்டவர்)

ஆகியோர் போட்டியிடுகிறார்கள். இவர்களில் 4 பேர் புதுமுக வேட்பாளர்கள் ஆவார்கள்

இவர்களில் பன்சுரி ஸ்வராஜ் மறைந்த பா.ஜனதா மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜின் மகள் ஆவார். இவர் உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக உள்ளார்.  ஏற்கனவே டில்லியில் இருந்து போட்டியிட்ட மத்திய அமைச்சர் மீனாட்சி லெகி மற்றும் ஹர்ஷவர்த்தனுக்கு இம்முறை போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.