நடிகர் சூர்யா நடித்திருக்கும் சூரரைப் போற்று படம் தியேட்டரில் வெளியாக விருக்கிறது. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கி உள்ளார். அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடித்திருக்கிறார். ஜிவி.பிரகாஷ்குமார் இசை அமைத் திருக்கிறார்.
இந்நிலையில் இன்று சூர்யா தனது டிவிட்டரில் ஒரு மெசேஜ் பதிவிட்டிருக் கிறார். ’பேசிய வார்த்தைகளைவிட பேசாத மவுனம் மிக ஆபத்தானது, காக்க காக்க.. சுற்றுச்சூழல் காக்க நம் மவுனம் கலைப்போம்’ என்று குறிப்பிட்டிருக் கிறார்.
சூர்யா டிவிட்டிய இந்த ஒரு டிவிட் பலரை பல கேள்விகள் எழ வைத்து அதற்கு அவர்களே விடையையும் சொல்ல வைத்திருக்கிறது.
ஜஸ்ட் ஒரு சிங்கிள் டிவிட் எல்லா டிவி சேனகளும் அலறுகின்றன. என்ன சொல்கிறார் சூர்யா என அவரை அரசிய லுக்குள் இழுத்துவிட்டிருக்கிறார்கள்.
சூர்யா என்ன சொல்கிறார். ஏதாவது அரசியல் விஷயத்தை அடித்து துவம்சம் செய்யப்போகிறாரா என்று பலரும் எண்ணிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் அதே டிவிட்டில் இஐஏ (EIA) என்ற ஹேஷ்டேக் பதிவிட்டிருக்கிறார். சுற்று சூழல் பற்றி தெரிவித்திருக்கிறார்.
சுற்று சூழல் காக்க வேண்டியதற்கான தேவையும் அதற்கான குரல் கொடுக்க் வேண்டிய நேரமும் வந்திருப்பதை உணர்த்தியிருக்கிறார். மத்திய அரசு வெளியிட்டுள்ள வரைவு EIA என்ற வரைவு அறிக்கைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டியதை உணர்ந்த்தியிருக்கிறார் சூர்யா.