சூரத்:
குஜராத் மாநிலம் சூரத்தில் 11 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இவரது தாயும் மாயமாகியுள்ளார். இந்நிலையில் சிறுமியின் உடல் கிடைத்த 3 நாட்கள் கழித்து கடந்த 9ம் தேதி ஒரு பெண்ணின் உடலை போலீசார் கைப்பற்றினர்.

அவர் சிறுமியின் தாயாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து டிஎன்ஏ பரிசோதனை மூலம் அந்த பெண்ணை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் போலீசாரின் விசாரணையில் ஒரு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. கொலை செய்யப்பட்ட 11 வயது சிறுமியும், அவரது தாயும் அடிமைத் தொழிலாளர்களாக ரூ. 35 ஆயிரத்துக்கு குற்றவாளியிடம் விற்பனை செய்யப்பட்டிருந்த தகவல் வெளியாகியுளளது. உத்தரபிரதேசம்&மத்திய பிரதேச எல்லையில் உள்ள கங்காபூரில் அவர்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தள்ளது.
அந்த பெண்ணின் கணவர் இறந்துவிட்டார். இதனால் வாழ்வாதாரத்திற்கு வழியின்றி தவித்து அந்த பெண் அடிமை தொழிலாளராக விற்பனை செய்ய சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியும், அவரது உறவினரும் சிறுமியை கொலை செய்து நீரில் மூழ்கடிக்கச் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முக்கிய குற்றவாளி ராஜஸ்தான் எல்லையில் கைது செய்யப்பட்டு அகமதாபாத் அழைத்து வரப்பட்டுள்ளார்.
[youtube-feed feed=1]