டில்லி:

ள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் என புதுச்சேரி  அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியில் கடந்த 2009ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதன்பிறகு தேர்தல் நடைபெறாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

தொகுதி வரையறை செய்வதாக கூறி தேர்தல் நடத்துவதை மாநில அரசுகள் காலம் தாழ்த்தி வந்தன. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், புதுவை அரசுக்கு உச்சநீதி மன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதன்படி, தொகுதி வரையறையை  நடவடிக்கையை விரைவாக முடித்து உள்ளாட்சி தேர்தலை நடத்த  நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும்,  உள்ளாட்சி தேர்தல் நடத்துவதில் தாமதம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.